2010-05-29 14:47:19

உலகை அணுஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு பிரிட்டன் புதிய அரசு நடவடிக்கை எடுப்பதற்கு Pax Christi அழைப்பு


மே29,2010 உலகை அணுஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு பிரிட்டனுக்கு இருக்கும் தார்மீகக் கடமையை அந்நாட்டின் புதிய அரசு நிறைவேற்றுமாறு Pax Christi என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உலகில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபைத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் இந்த ஆயுதங்கள் இன்னும் பெருமளவில் இருப்பதாகவும், இவற்றில் சில ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாவும் பாக்ஸ் கிறிஸ்டியின் பொதுச் செயலர் Pat Gaffney கூறினார்.

பிரிட்டன், அணுஆயுதங்களை அதிகமாகக் கொண்டிருப்பதாக உரைத்த Pat Gaffney, சர்வதேச அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தின் ஆறாவது பிரிவின்கீழ் வாழ்வதற்கு பிரிட்டனுக்கு ஒழுக்கரீதியான கடமை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.