2010-05-28 14:43:38

மே 29. நாளும் ஒரு நல்லெண்ணம்.


மகிழ்ச்சி என்பதுதான் என்ன?

செயலா? செயலின் விளைவா?

அனைத்திலும் மகிழ்ச்சி சாத்தியமா?

சாதகமானவைகள் மட்டுமே மகிழ்ச்சி

தரும் பட்சத்தில், நினைப்பதெல்லாம்

நடந்தால்தான் அனைத்திலும் மகிழ்ச்சியாகும்.

அது சாத்தியமில்லை.

ஏனெனில், முட்களைப் பார்த்து ரோசாவைக்

கண்டு அஞ்சுகிறோமா? அல்லது

ரோசாவை ரசித்து முட்களை மறந்து விடுகிறோமா

என்பதைப் பொறுத்தது வாழ்க்கை.

அன்பான ஆதரவு வார்த்தைகள்,

இரக்கம் நிறை உதவி மனப்பான்மை,

சுயநலமாய் குத்திக்காட்டி புண்படுத்தாமை,

பிறர் பலவீனங்கள் மீது பரிவுப் பார்வை

இவையிருந்தால் என்றும் எதிலும் மகிழ்வே.

ஒரு நாளைக்கு ஒருவரையாவது மகிழ்ச்சியாய்

வைத்திருக்க முயல்வோம்.

புன்னகைக்கப் பழகுங்கள்.

பிரதிபலித்துத் தொடரும் மகிழ்வு.........








All the contents on this site are copyrighted ©.