2010-05-26 15:11:08

சிறார் விற்பனை, சிறார் விபசாரம் போன்றவற்றைச் சர்வதேச அளவில் தடை செய்ய ஐக்கிய நாடுகள் நிறுவனம் முயற்சி


மே26,2010 சிறார் விற்பனை, சிறார் விபசாரம், சிறார் பாலியல் குறித்த இழிவான ஊடகங்கள் ஆகியவற்றைச் சர்வதேச அளவில் தடை செய்யவும், ஆயுதம் தாங்கிய சண்டைகளிலிருந்து சிறாரைப் பாதுகாக்கவுமென பெரிய முயற்சியில் இறங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.

சிறார் வியாபாரம், சிறார் விபசாரம் போன்றவைகளைத் தடை செய்யும் சர்வதேச உடன்பாட்டை 2012ம் ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்த அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

நியூயார்க் ஐ.நா.தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர், இன்றைய உலகில் திகைக்க வைக்கிற உரிமை மீறல்களை சிறார் எதிர்கொள்வது வருத்தமான உண்மையாக இருக்கின்றது என்றார்.

சிறார் விற்பனை, சிறார் விபசாரம், சிறார் பாலியல் குறித்த ஊடகங்கள் ஆகியவற்றைச் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தை 137 நாடுகள் அமல்படுத்தியுள்ளன, இன்னும் 27 நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும் அமல்படுத்தவில்லை, மேலும் 29 நாடுகள் கையெழுத்திடவுமில்லை, அமல்படுத்தவுமில்லை.

சிறார் படைவீரரைத் தடைசெய்யும் உலக உடன்பாட்டில் 132 நாடுகள் அமல்படுத்தியுள்ளன, இன்னும் 25 நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும் அமல்படுத்தவில்லை, மேலும் 36 நாடுகள் கையெழுத்திடவுமில்லை, அமல்படுத்தவுமில்லை.








All the contents on this site are copyrighted ©.