2010-05-26 15:07:58

இந்தோனேசியாவில் ஏழ்மையை அகற்றுவதற்கு பல்சமயத் தலைவர்கள் நடவடிக்கை


மே26,2010 இந்தோனேசியாவில் ஏழ்மையை அகற்றுவதற்கு உதவும் பல்சமய அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர் அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.

இந்தோனேசியாவின் கத்தோலிக்க, புத்த, கன்பூசிய, இந்து, முஸ்லீம் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபையின் தலைவர்கள் இணைந்து, நீதியைக் காப்பது மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான பல்சமய செயல்பாடு என்ற ஒரு முயற்சியை மத்திய ஜகார்த்தாவில் தொடங்கியுள்ளனர்.

தற்சமயம் இந்தோனேசியாவின் சுமார் 23 கோடி மக்கள் தொகையில் ஏறக்குறைய நாற்பது விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர்.

இப்புதிய முயற்சியில் இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர் பேரவை, பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, அந்நாட்டின் மிகப்பெரிய முஸ்லீம் நிறுவனமான Nahdlatul Ulama, இரண்டாவது பெரிய முஸ்லீம் அமைப்பான Muhammadiyah உட்பட பல சமய அமைப்புக்களின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.