2010-05-26 15:05:44

Neostem கம்பெனியுடன் இணைந்து கத்தோலிக்கத் திருச்சபை முதிர்ந்த திசுக்கள் சிகிச்சை குறித்த ஆராய்ச்சி


மே26,2010 முதிர்ந்த திசுக்கள் சிகிச்சை குறித்த ஆராய்ச்சியை விரிவுபடுத்தவும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Neo-stem என்ற சர்வதேச மருந்து விற்பனைக் கம்பெனியுடன் இணைந்து செயல்படுவதற்கானத் தனது திட்டத்தை இச்செவ்வாயன்று அறிவித்தது வத்திக்கான்.

மறுவாழ்வளிக்கும் மருந்துகளில் முதிர்ந்த திசுக்களைப் பயன்படுத்துவது குறித்த வழிகளைக் கண்டுபிடிக்கவும், அது குறித்த ஆராய்ச்சியை முன்னேற்றவும், வாழ்வுக்கானத் திசுக்கள் நிறுவனம், STOQ என்ற அறிவியல் இறையியல் மற்றும் மெய்பொருள் மூல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை எடுத்து வரும் முயற்சிகளுடன் திருப்பீட கலாச்சார அவை இணைந்து செயலாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்வைப் பாதிக்காத அளவில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் திருப்பீட கலாச்சார அவையின் அருட்திரு Tomasz Trafny கூறினார்.

பல்வேறு இரத்தப் புற்றுநோய்ச் சிகிச்சைகளுக்கு முதிர்ந்த திசுக்களைப் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றுரைத்த அருட்திரு Trafny, இன்னும்பல குறிப்பிடத்தக்க நோய்களுக்கு இது பயன்படுத்தப்படலாம் என்று அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.