2010-05-25 14:45:26

கோங்கோ மற்றும் மொல்தோவா நாடுகளின் அரசுத்தலைவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர்.


மே 25, 2010. இத்திங்களன்று கோங்கோ மற்றும் மொல்தோவா நாடுகளின் தலைவர்கள் திருப்பீடத்தில் திருத்தந்தையை தனித்தனியே சந்தித்து அந்நாடுகளில் திருச்சபை ஆற்றி வரும் பணிகள் குறித்து விவாதித்தனர்.

இச்சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள திருப்பீடப் பத்திரிகைத்துறை, இரு நாடுகளின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து திருத்தந்தை அவர்களுடன் விவாதித்ததாகவும் அதில் மனிதாபிமானப் பிரச்னைகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது.அனைத்துப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்பதை கோங்கோ அரசுத்தலைவர் Denis Sassou Nguesso விடமும் Moldova அரசுத்தலைவர் Mihai Ghimpu விடமும் திருத்தந்தை வலியுறுத்தியதாகவும் திருப்பீடப் பத்திரிகைத்துறை மேலும் தெரிவித்தது.

கோங்கோ நாடு சுதந்திரம் பெற்றதன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் குறித்தும் திருத்தந்தையுடன் விவாத்தித்தார் அரசுத்தலைவர் நுகுயெஸ்ஸோ.








All the contents on this site are copyrighted ©.