2010-05-24 16:02:36

இளம் வயது குழந்தை மரணங்களின் எணணிக்கைக் குறைந்துள்ளது.


மே 24, 2010. ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தகும் வகையில் குறைந்து வருவதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

5 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1990ம் ஆண்டு 1கோடியே 19 இலட்சமாக இருந்தது தற்போது 77இலட்சமாகக் குறைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மலேரியா தடுப்பு நடவடிக்கைகள், எயிட்ஸ் நோயிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் பாதுகாப்பு முயற்சிகள் போன்றவைகளால் இந்நிலை எட்டப்பட்டுள்ளதாகக் கூறும் இவ்வாய்வு, உலகில் Swaziland, Lesotho, Equatorial Guines, Antigua ,Barbuda ஆகிய நாடுகள் தவிர ஏனைய அனைத்து நாடுகளிலும் குழந்தை இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவிக்கிறது.

அதே வேளை எயிட்ஸ் நோய், புகைப்பிடித்தல், உடல் பருமன் ஆகியக் காரணங்களால் வயது வந்தோர் இறப்பது அதிகரிப்பதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இதனால் 37 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.