2010-05-21 15:21:42

மனித மாண்பை விலைபேசும் அளவுக்கு பாதுகாப்பான எல்லைப்புறங்களை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை – அமெரிக்க ஆயர்கள்


மே21,2010 மனித மாண்பையும் மனிதரின் அடிப்படை உரிமைகளையும் விலைபேசும் அளவுக்கு, பாதுகாப்பான எல்லைப்புறங்களையும் மக்களுக்கானப் பாதுகாப்பையும் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிகோ ஆயர்கள் கூறினர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பாரக் ஒபாமாவும் (Barack Obama), மெக்சிகோ அரசுத் தலைவர் பெல்ப்பே கல்தேரோனும் (Felipe Calderon) குடியேற்றதாரர் தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும்பிற விவகாரங்களைத் தீர்ப்பதற்குச் சேர்ந்து செயல்படுவதற்குத் தீர்மானித்திருப்பதையடுத்து இவ்விரு நாடுகளின் ஆயர்கள் பேரவைகளின் குடியேற்றதாரர் ஆணையங்களின் தலைவர்கள் பரிசீலனை அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இவ்விரு நாடுகளின் தலைவர்களின் குடியேற்றதாரர் குறித்த கொள்கைகள் மனிதர் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரிசோனா மாநிலத்தில் சுமார் ஐந்து இலட்சம் மெக்சிகோ குடியேற்றதாரர்கள் சட்டத்துக்குப் புறம்பே வாழ்கின்றனர். இந்த மாநிலமானது மெக்சிகோவிற்கு 350 மைல் தூரத்தில் உள்ளது.








All the contents on this site are copyrighted ©.