2010-05-21 15:15:05

தொமினிக்கன் குடியரசு அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


மே21,2010 இவ்வெள்ளியன்று தொமினிக்கன் குடியரசு அரசுத் தலைவர் Leonel Antonio Fernández Reyna வைத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே Tarcisio Bertone, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி Dominique Mamberti ஆகியோரையும் சந்தித்தார் தொமினிக்கன் குடியரசு அரசுத் தலைவர்.

இச்சந்திப்புக்களின் போது, நாட்டின் வளர்ச்சிக்காக, குறிப்பாக கல்வி, நலவாழ்வு போன்ற துறைகளில் திருச்சபை ஆற்றிவரும் பணிகளுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அத்துடன், மனித வாழ்வு தாயின் கருவிலிருந்து அது இயற்கையான மரணம் அடையும்வரை காப்பாற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

தொமினிக்கன் குடியரசு எதிர்நோக்கும் சவால்கள் பற்றி அரசுத்தலைவர் Fernández Reyna எடுத்துரைத்த போது, ஹெய்ட்டி நாட்டில் அக்குடியரசு செய்துவரும் மனிதாபிமானப் பணிகளையும் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.