2010-05-20 14:40:10

மே 21 நாளும் ஒரு நல்லெண்ணம்


உயர்ந்த மனிதன் யார்? வேதங்கள் சொல்வது என்ன?

உயர்ந்த மனிதனாக வர விரும்புகிறவன் தன் மனதில் ஓடும் எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். தன்னுடைய நலனைப் பற்றிச் சிறிதுகூட நினைக்காமல் மனித குலத்திற்கு நன்மைதரும் செயல்களில் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும். களங்கம் சிறிதுகூட இல்லாமல் தூய்மையின் மறுஉருவமாக இருக்க வேண்டும். சுயநலத்தை முற்றிலும் துறந்தவனாக இருக்க வேண்டும். தன்னுடைய மனத்தை முழுவதும் வெற்றி கொண்டவனாக இருக்க வேண்டும். இன்பம், துன்பம், கீர்த்தி, அபகீர்த்தி, புகழ், இகழ்ச்சி போன்றவைகள் எது வந்தாலும் சிறிதும் பெருமைப்படாமலும் கலங்காமலும் கம்பீரமாகவும் நடந்து கொள்பவனாக அவன் திகழ வேண்டும். தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். தங்கக்கட்டி கல் மண் அனைத்தையும் ஒரேமாதிரி கருதும் மனநிலையை வளர்த்துக் கொண்டவனாக இருக்க வேண்டும். நண்பன், பகைவன், தெரிந்தவன், தெரியாதவன் வெளிநாட்டவன், துறவி, பாவி என எல்லாரிடமும் ஒரே மாதிரியான அன்புடன் நடந்து கொள்பவனாக இருக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.