2010-05-20 15:01:24

கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் ஒருவருக்கொருவர் போட்டியாளர்கள் அல்ல மாறாக உடனுழைப்பாளர்கள்.


மே. 02. 2010. கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் ஒருவருக்கொருவர் போட்டியாளர்கள் அல்ல மாறாக உடனுழைப்பாளர்கள் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இக்கிறிஸ்தவ சபையின் மாஸ்கோ பிதாப்பிதா இல்லத்தின் வெளிவிவகாரத் துறையின் தலைவர் பேராயர் ஹில்லாரியன் ஆல்ஃபெயேவ் உரைக்கையில், அரசியல் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாதவைகளை பல்வேறு படிகளிலான பேச்சுவார்த்தைகளின் வழி வாழ முடியும் என்றார்.

பழங்கால பகைமைகள் பழங்காலத்திலேயே இருக்க வேண்டும் அது தற்காலத்திற்கு உரியது அல்ல என்ற பேராயர், இன்றைய உலகில் கிறிஸ்தவம் தன் ஆளுமையை இழந்து வருவது, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத்திற்கும் கத்தோலிக்க மதத்திற்கும் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது என்றார்.

ரஷ்ய கலாச்சாரம் முழுவதும் கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்ற ஆர்த்தடாக்ஸ் பேராயர் ஆல்ஃபெயேவ், பாரம்பரிய மதிப்பீடுகளை கடைப்பிடிப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான அர்ப்பணம் ரஷ்ய மக்களிடையே உள்ளது எனவும் கூறினார்.

கத்தோலிக்கர்களுக்கும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான இறையியல் பேச்சுவார்த்தைகள் இன்னும் பல காலம் தொடரும் என்ற அவர், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருச்சபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ரஷ்ய மக்களுள் பெருமெண்ணிக்கையினோருக்கு மகிழ்ச்சியே எனவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.