2010-05-20 15:00:12

ஒரே பாலினத் திருமண அனுமதிச் சட்டத்திற்கு எதிராக போர்த்துக்கல் திருச்சபை போர்க்கொடி.


மே. 02. 2010. போர்த்துக்கல் நாட்டில் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்தை நிறைவேற்ற அரசுத்தலைவர் முன்வந்திருப்பது குறித்து அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

தான் இம்மசோதாவில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினாலும் அது மக்கள் பிரதிநிதிகள் அவையால் எப்படியும் நிறைவேற்றப்படும், ஆகவே வீண் காலவிரயத்தைத் தான் தவிர்க்க விரும்புவதாக போர்த்துக்கல் அரசுத்தலைவர் ஆனிபல் கவாகோ சில்வா தெருவித்ததைப் பற்றி கருத்து வெளியிட்ட ஆயர் பேரவை பிரதிநிதி, சமூக ஒன்றிணைந்த வாழ்வைக் கட்டியெழுப்புவதில் இச்செயல் பெருந்தடையாக இருக்கும் என்றார்.

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான திருமணமே பொது நலனைக் கட்டியெழுப்புவதில் முக்கிய மூலக்கூறு எனவும் கூறினார் அக்குரு மானுவேல் மொருயாவோ.

பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கும் போர்த்துக்கல்லில் இன்று தேவைப்படுவது ஒற்றுமை முயற்சிகளேத் தவிர இத்தகைய பிரிவினைகளுக்கு வித்திடும் வழிகள் அல்ல எனவும் கூறினார் அவர்.

ஒரே பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க போர்த்துக்கல் நாடு முயன்று வரும் வேளையில், பெல்ஜியம், ஸ்பெயின், நார்வே, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இது ஏற்கனவே சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.