2010-05-19 15:59:04

பாலியல் ரீதியானத் தவறுகள் செய்பவர்கள் மீது சகிப்புத்தன்மை காட்டப்படவே கூடாது - பூனே ஆயர்


மே19,2010 பாலியல் ரீதியானத் தவறுகள் செய்பவர்கள் மீது, குறிப்பாக இத்தவறுகளைச் செய்யும் குருகுலத்தார் மீது சகிப்புத்தன்மை காட்டப்படவே கூடாது என்று பூனே ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.

இத்தகைய தவறுகளைச் செய்பவர்களுக்குச் சட்டரீதியான விசாரணை இடம் பெற வேண்டும் மற்றும் இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்றும் பூனே ஆயர் கூறினார்.

இந்திய ஆயர் பேரவையும் இந்திய துறவு சபைகளின் அதிபர்களும் இணைந்து இந்த விவகாரம் குறித்து கலந்து பேசவிருப்பதை முன்னிட்டு ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த, இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் இறையியல் ஆணையத் தலைவரான ஆயர் தாப்ரே இவ்வாறு கூறினார்.

திருச்சபையில் இடம் பெறும் இத்தவறுகள் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எதுவுமே நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவருக்கெதிரான மிகைப்படுத்தப்பட்ட வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதைக் கண்டித்துப் பேசிய ஆயர், இத்தகைய விவகாரங்கள் குறித்து மிகவும் தைரியமாகவும் உறுதியாகவும் நடவடிக்கை எடுக்கும் பாப்பிறைகளில் இவரும் ஒருவர் என்றும் உரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.