2010-05-19 16:00:54

திருச்சி உலக தமிழ்க் கிறிஸ்தவ மாநாடு


மே19,2010 இவ்வெள்ளியன்று திருச்சியில் தொடங்கவிருக்கும் உலக தமிழ்க் கிறிஸ்தவ மாநாட்டில் அமெரிக்க ஐக்கிய நாடு, மலேசியா உட்பட 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறவிருக்கின்ற இம்மாநாட்டில் சுமார் 130 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன என்று இந்திய செய்தி நிறுவனமான Press Trust of India. அறிவித்தது.

1996ம் ஆண்டு நியுயார்க்கில் நடைபெற்ற 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்சமயம் இந்த மாநாடு திருச்சியில் தொடங்கவுள்ளது.

உலக கிறிஸ்தவக் கழகமும் தென்னிந்திய திருச்சபையும் இம்மாநாட்டை முன்னின்று நடத்துகின்றன என்று ஆயர் ஜி.பவுல் வசந்த குமார் நிருபர்களிடம் அறிவித்தார்.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் A.ராஜா, தமிழக அமைச்சர்கள் K N Nehru, N Selvaraj, Geetha Jeevan போன்றோரும் இதில் கலந்து கொள்வார்கள் என்று ஆயர் பவுல் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.