2010-05-18 15:26:14

உலகை அச்சுறுத்தும் நலவாழ்வு குறித்த சவால்களைச் சமாளிப்பதற்கு பெரும் முயற்சிகள் தேவை.


மே18,2010 உலகை அச்சுறுத்தும் நலவாழ்வு குறித்த சவால்களைச் சமாளிப்பதற்கு, 30 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் பெரியம்மை நோயை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் மார்கிரேட் ஷான் கேட்டுக் கொண்டார்.

ஜெனீவாவில் தொடங்கிய 63வது உலக நலவாழ்வு கூட்டத்தில் உரையாற்றிய ஷான், பொதுநல வரலாற்றில் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டது பெரும் சாதனை எனக் கூறினார்.

வருவாய் குன்றிய நாடுகளில் எய்ட்ஸ் மற்றும் ஹைச்சய்வி நோய்க் கி்ருமிகளுக்கானத் தடுப்பு மருந்துகளை 2002ம் ஆண்டின் இறுதியில் 2 இலட்சம் பேர் பெற்றனர், தற்சமயம் 40 இலட்சம் பேர் பெறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

நோய்களைத் தடுப்பதற்கும் பொதுநலவாழ்வை மேம்படுத்துவதற்கும் சர்வதேச அளவில் முயற்சிகள் தேவை என்பதையும் உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் மார்கிரேட் ஷான் வலியுறுத்தினார்.

 








All the contents on this site are copyrighted ©.