2010-05-17 15:37:25

புத்த மதத்தினரின் வேசாக் திருவிழாவுக்கென மதங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவையின் வாழ்த்து.


மே17,2010 அமைதி மற்றும் மகிழ்வுக்கான வாழ்த்துக்களை புத்த மதத்தினருக்குத் தெரிவிக்கும் இச்செய்தி,சுற்றுச்சூழல் சீர்கேடடைந்து வரும் இந்நாட்களில் இரு மதத்தினரும் இணைந்து விழிப்புணர்வுக்கென மக்களிடையே ஆற்றிவரும் சேவையை சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மனிதனின் முழு வளர்ச்சியோடு தொடர்புடையது என்பதை உறுதியாக நம்பும் திருச்சபை, நிலம், நீர், காற்று ஆகியவைகளை பதுகாப்பதை ஊக்கிக்குவிப்பது மட்டுமல்ல மனிதனை அழிவிலிருந்து காப்பாற்ற ஏனையோர் ஒன்றிணைந்து உழைக்கவும் ஊக்கமளிக்கிறது என திருப்பீட அவையின் வாழ்த்துச் செய்தி கூறுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது நாம் ஒருவர் ஒருவரை மதிப்பதிலிருந்து பிறக்கிறது எனவும் கூறுகிறது அச்செய்தி.

மனித வாழ்வின் மீது ஆழமான மதிப்பைக் கொண்டிருக்கும் கிறிஸ்தவம் மற்றும் புத்த மதம், சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்வுகளை ஊக்குவிப்பதோடு அயலார் மற்றும் இயற்கையை மதிக்கக் கற்று தரும் குடும்பம் மற்றும் மனிதனின் மாண்பை எச்சூழலிலும் வலியுறுத்தி உறுதிப்படுத்தவேண்டும் எனவும் திருப்பீட அவையின் செய்தி கூறுகிறது.

இரு மதங்களும் இணைந்து சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும் இடையேயான உறவை ஊக்குவிக்க உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ள இச்செய்தி, மீண்டும் ஒரு முறை தன் வாழ்த்துக்களை புத்த மதத்தினரின் வேசாக் விழாவையொட்டி தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.