2010-05-15 15:38:43

மே 16 வரலாற்றில் இன்று


1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.

1916 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.

1920 - ரோமில் ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதர் என அறிவிக்கப்பட்டார்.

1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியோடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.

1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.

1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.

1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.

1975 - ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.

2004 – 1930 மற்றும் 1940களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.

 








All the contents on this site are copyrighted ©.