2010-05-14 15:32:36

ஜப்பான் கத்தோலிக்கரில் 51 விழுக்காட்டினர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகளால் பாதிக்கப்படுகின்றனர்- காரித்தாஸ் அறிக்கை


மே14,2010 ஜப்பான் கத்தோலிக்கரில் 51 விழுக்காட்டினர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகளால் பாதிக்கப்படுவதாகக் கூறியதாகவும், இக்கத்தோலிக்கரில் மூன்றில் ஒருபகுதியினர் தற்கொலை பாவம் என்று சொன்னதாகவும் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகின்றது.

ஜப்பானில் கடந்த பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு முப்பதாயிரத்துக்கு அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டதாகவும் 2009ம் ஆண்டில் 32,845 பேர் தற்கொலை செய்ததாகவும் இவ்வெண்ணிக்கை 2008ம் ஆண்டைவிட 1.8 விழுக்காடு அதிகம் எனவும் தேசிய கொள்கை அமைப்பு நிறுவனம் இவ்வியாழனன்று இந்தப் புள்ளி விபரங்களை வெளியிட்டது.

தற்கொலைகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஜப்பான் காரித்தாஸ் நடத்திய ஆய்வின்படி, தற்கொலை செய்து கொள்வது பாவம் என்று 31 விழுக்காட்டினர் கூறியதாகத் தெரிகிறது.

இந்த ஆய்வு, ஜப்பானின் 81 பங்குகளில் 7,955 பொதுநிலையினரிடமும், 250 துறவற சபைகளின் 1000 கன்னியர்களிடமும் 500 மறைமாவட்ட குருக்களிடமும் நடத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.