2010-05-14 15:32:14

குடியேற்றதாரரின் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம் அமல்படுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்


மே14,2010 இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் உலகக் குடும்ப தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், நல்லதொரு வாழ்க்கை நிலைகளை அமைத்துக் கொள்வதற்காக தங்கள் சொந்த வீடுகளைவிட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்வேளை, குடியேற்றதாரக் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்படுமாறு கேட்டுக் கொண்டார்.

வறுமை, வேலைவாய்ப்பின்மை, அரசியல் அல்லது ஆயுதம் தாங்கிய மோதல்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களாலேயே பலர் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறுகின்றனர் என்றும் பான் கி மூன் அதில் குறிப்பி்ட்டுள்ளார்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்வையும் பிற குடும்ப உறுப்பினர்களையும் மேம்படுத்துவதற்குமென பிறநாடுகளுக்குச் செல்கின்றனர் என்றும் இக்குடியேற்றதாரர்கள், கடும் வாழ்க்கைச் சூழல்கள், பாகுபாடுகள், குறைந்த ஊதியம் போன்றவற்றை எதிர்நோக்குகின்றனர் என்றும் பான் கி மூனின் செய்தி கூறுகின்றது.

குடியேற்றதாரர்களுக்குக் கிடைக்கும் பல நன்மைகளுடன் அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களின்மீது பெரும் சுமைகளையும் இறக்கி வைக்கின்றனர் என்றுரைக்கும் அவரின் செய்தி, குடியேற்றதாரத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகளின் பாதுகாப்பு குறித்த சர்வதேச ஒப்பந்தத்தை அமல்படுத்தாத நாடுகள் விரைவில் அதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.