2010-05-14 15:32:03

குடியேற்றதாரக் குடும்பங்கள் வரவேற்கப்பட்டு அவைகளின் சமூக மற்றும் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்படுவதற்கு வத்திக்கான் அதிகாரிகள் அழைப்பு


மே14,2010 குடும்பங்கள் தனது உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் சமூக ஒருங்கிணைப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை என்பதால் அவைகளின் ஒன்றிணைந்த வாழ்வை ஊக்குவிக்கும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“உலகின் குடியேற்றதாரர் குடும்பங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள்” என்ற தலைப்பில் மே15ம் தேதி இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் உலகக் குடும்ப நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட திருப்பீட குடியேற்றதாரர் அவையும் திருப்பீட குடும்ப அவையும் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளன.

இவ்வறிக்கையில் திருப்பீட குடும்ப அவைத் தலைவர் கர்தினால் Ennio Antonelliயும் திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Vegliòவும் கையெழுத்திட்டுள்ளனர்.

மாண்புடன்கூடிய ஒரு வாழ்வை குடும்ப உறுப்பினர்களுக்கு அமைத்துக் கொடுப்பதற்காக சொந்த இடங்களைவிட்டு பொதுவாக ஆண்கள் வெளியேறி வந்தனர், ஆனால் தற்சமயம் பெண்களும் அதிக அளவில் வெளியேறி வருகின்றனர் என்றும் கூறும் அவ்வறிக்கை, இதனால் குடும்பங்களின் ஒன்றிணைப்பு பாதிக்கப்படுகின்றது என்றும் கூறுகிறது.

இந்தக் குடியேற்றதாரரை வரவேற்று அவர்களின் தனிப்பட்ட, சமூக மற்றும் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்படுவதற்கு ஏற்ற கொள்கைகள் நாடுகளில் உருவாக்கப்படுமாறும் வத்திக்கான் அதிகாரிகளின் அறிக்கை வலியுறுத்துகின்றது.








All the contents on this site are copyrighted ©.