2010-05-13 15:07:15

பிலிப்பைன்ஸ் மக்கள் தேர்தலில் விழிப்புடன் செயல்பட்டார்கள் – அருட்திரு மரியன்


மே13,2010 பிலிப்பைன்சில் நடந்து முடிந்த இந்தப் பொதுத் தேர்தலில் வாக்காளர்களில் 85 விழுக்காட்டினர் வாக்குப் பதிவு செய்ததாகவும், ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், குறிப்பாக இளையோர் மணிக்கணக்காகக் காத்திருந்து வாக்குப் பதிவு செய்தனர் எனவும் PIME மறைபோதகக் குரு ஜூலியஸ் மரியன் கூறினார்.

பிலிப்பைன்சில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் குரு மரியன், இவ்வாரத்தில் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் 5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுத்தனர் என்று கூறினார்.

அரசுத் தலைவர், உதவி அரசுத் தலைவர், 250 காங்கிரஸ் அவை உறுப்பினர்கள், 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட நகரசபை மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்களும் இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னாள் அரசுத்தலைவர் அக்குய்னோவின் மகன் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்








All the contents on this site are copyrighted ©.