2010-05-12 16:21:39

மனித வியாபாரம் நவீன அடிமைத்தனத்தின் கீழ்த்தரமான அமைப்புமுறை - ஜோஹான்னஸ்பர்க் கத்தோலிக்க பேராயர்


மே12,2010 மனித வியாபாரம் நவீன அடிமைத்தனத்தின் கீழ்த்தரமான அமைப்புமுறை என்று குறைகூறி கிறிஸ்தவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஜோஹான்னஸ்பர்க் கத்தோலிக்க பேராயர் Buti Tlhagale அழைப்பு விடுத்தார்.

தென்னாப்ரிக்காவின் ஜோஹான்னஸ்பர்க்கில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கவிருக்கும் இவ்வேளையில், மனித வியாபாரம் முடிவுக்கு வரப்படவேண்டுமென்று Pretoria வில் ஏறக்குறைய ஆயிரம் பேர் கூடி செபித்த போது பேராயர் Tlhagale இவ்வாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார்.

உலக கோப்பை கால்பந்து போட்டி தன்னிலே மிகவும் வியக்கத்தக்க நிகழ்வாக இருந்தாலும், இது சில மனிதர்களில் மோசமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும் என்று பேராயர் எச்சரித்தார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது ஏறக்குறைய 40 ஆயிரம் பாலியல் தொழிலாளிகளும் விபசாரிகளும் தென்னாப்ரிக்காவுக்கு கொண்டுவரப்படவுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

வருகிற ஜூன் 11 முதல் ஜூலை 11வரை ஜோஹான்னஸ்பர்க்கில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவிருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.