2010-05-10 16:26:01

மே 11 வரலாற்றில் இன்று


1502 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளுக்கானத் தனது கடைசியும் நான்காவதுமான கடற்பயணத்தை ஆரம்பித்தார்.

1857 - இந்தியப் புரட்சியாளர்கள் பிரித்தானியர்களிடமிருந்து டெல்லியை கைப்பற்றினர்.

1867 - லக்சம்பர்க் விடுதலை அடைந்தது.

1895 ல் இந்தியத் தத்துவஞானி ஜி. கிருஷ்ணமூர்த்தியும்

1897 ல் சுத்தானந்த பாரதியாரும் பிறந்தனர்

1905 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.

1924 - மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.

1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1949 - ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் இணைந்தது








All the contents on this site are copyrighted ©.