2010-05-10 16:27:43

மே 11 நாளும் ஒரு நல்லெண்ணம்


எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவதற்கு அந்தக் குழு நெருங்கி வந்தாகி விட்டது. ஆனால் பலத்த பனிக்காற்று. அந்தக் குழுவில் இருந்த அனைவருமே இந்த முறை முயற்சியை விட்டுவிட்டு மற்றொரு சமயத்திலே எவரெஸ்டை எட்டலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனால் அந்தப் பயணத்தின் இலக்கை விடாப்பிடியாய்ப் பற்றிய அந்தக் குழுவில் இருந்த இருவர் மட்டுமே முன்னே நடக்கத் தொடங்கினார்கள். மறுநாள் காலை அதாவது 1953ம் ஆண்டு மே 30. அந்த இருவர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார்கள். அப்போது அந்தக் குழுவே பெருமைப்பட்டது. அந்த இருவர்தான் எட்மண்ட் ஹில்லரியும் டென்சிங்கும்.

விடாது முன்னே செல்கின்ற சமயங்களிலெல்லாம் விடாது வெற்றி நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கும். வெற்றிக் கொடி ஏற்று. புகழ் ஏணியில் ஏறு. ஆனால் அவை இரண்டும் வேறு வேறு. குழம்பாதே







All the contents on this site are copyrighted ©.