2010-05-08 16:09:32

உரோமையில் இரஷ்ய ஆன்மீகம் சிறப்பிக்கப்படவிருக்கின்றது


மே08,2010 கத்தோலிக்கருக்கும் ஆர்த்தாடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்குமிடையேயான உரையாடலை வெளிப்படுத்தும் விதமாக, உரோமையில் இம்மாதத்தில் "வத்திக்கானில் இரஷ்ய கலாச்சாரமும் ஆன்மீகமும் என்ற தலைப்பில்" கத்தோலிக்க மற்றும் இரஷ்ய ஆர்த்தாடாக்ஸ் தலைவர்கள் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதனை அறிவித்தத் திருப்பீட பத்திரிகை அலுவலகம், இக்கொண்டாட்டம் இம்மாதம் 19,20 தேதிகளில் நடைபெறும் என்றும் மாஸ்கோ ஆர்த்தாடாக்ஸ் பிதாப்பிதா அலுவலகமும் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை மற்றும் திருப்பீட கலாச்சார அவையும் இணைந்து இதனை நடத்தும் என்றும் அறிவித்தது.

திருத்தந்தை 16ம் பெனடிக்டை கௌரவிக்கும் விதமாக இம்மாதம் 20ம் தேதி இசைக் கச்சேரி ஒன்றை வத்திக்கான் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், அனைத்து இரஷ்ய மற்றும் மாஸ்கோ பிதாப்பிதா முதலாம் கிரில் Kirill I ஏற்பாடு செய்துள்ளார்.

மாஸ்கோ ஆர்த்தாடாக்ஸ் பிதாப்பிதாவின் பிரதிநிதிகள், இம்மாதம் 14 முதல் 18 வரை, ரவென்னா, மிலான், டூரின், பொலோஞ்ஞா ஆகிய இத்தாலிய நகரங்களில் சுற்றுப்பயணமும் மேற்கொள்வார்கள் என்றும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.