2010-05-08 16:09:43

2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மனித வியாபாரங்கள் தடை செய்யப்படுவதற்கு அருட்சகோதரிகள் புதிய நடவடிக்கை


மே08,2010 தென்னாப்ரிக்காவில் வருகிற ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறவிருக்கின்ற உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுக்களின் போது மனித வியாபாரங்கள் தடை செய்யப்படுவதற்குச் சர்வதேச பெண் துறவற சபைகள் அதிபர்களின் அமைப்பு புதிய நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளது.

"2010 விளையாட்டு குறித்து," என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இப்புதிய நடவடிக்கை மூலம், கால்பந்து விளையாட்டுப் பிரியர்கள், சமயத் தலைவர்கள், மனித வியாபாரத்துக்கு உட்படுத்தப்படுவோர், பொது மக்கள் ஆகிய எல்லாருக்கும் மனித வியாபாரம் பற்றிய விழிப்புணர்வும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுக்களின் போது அருட்சகோதரிகளின் இவ்வமைப்பு எடுத்த முயற்சியினால் பத்துக்கும் ஏற்பட்ட மனித வியாபார நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று இந்த அமைப்பின் அருட்சகோதரி பெர்னதெத் சங்மா கூறினார்.

தற்சமயம் உரோமையில் நடைபெற்று வரும் இந்தச் சர்வதேச பெண் துறவற சபைகளின் அதிபர்களின் ஐந்து நாள் மாநாட்டில் 75 நாடுகளின் ஏறக்குறைய 1000 அருட்சகோதரிகள் கலந்து கொள்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.