2010-05-07 16:24:42

நெருக்கடிகளை எதிர்நோக்கும் கிரேக்க மக்களுக்கு உதவ கிறிஸ்தவத் தலைவர்கள் முன்வந்துள்ளனர்


மே07,2010 கிரேக்க அரசு எடுத்துள்ள கடும் நிதிக்கொள்கைகளின் விளைவுகளை எதிர்நோக்கும் கிரேக்க மக்களுக்கு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபை உதவுவதற்குத் தயாராக இருப்பதாக அச்சபையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் இடம் பெற்ற கிறிஸ்தவ சபைகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட கிரீஸ் ஆர்த்தடாக்ஸ் சபைக் குரு Gabriel Papanicolaou, ஏத்தென்ஸ் பேராயரும் கிரீஸ் ஆர்த்தடாக்ஸ் சபையின் பிதாப்பிதாவுமாகிய இரண்டாம் Hieronymos, கிரீஸ் பிரதமர் George Papandreou ஐ கடந்த திங்களன்று சந்தித்து துன்பகாலத்தை எதிர்நோக்கும் மக்களுக்கு திருச்சபை ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

கிரீஸில் இப்புதனன்று இடம் பெற்ற தொழிற்சங்கங்களின் மாபெரும் கிளர்ச்சியின் போது 3 பேர் இறந்தனர்.

கிரீசின் ஏறக்குறைய ஒரு கோடியே 10 இலட்சம் பேரில் சுமார் ஒரு கோடிப் பேர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.

உலக நாகரிகம் பிறந்த கிரீஸ் நாட்டில், தற்போது வேலையின்மை, பஞ்சம், விலைவாசி உச்சம், பண வீக்கம் என பொருளாதாரம் நாட்டையே புரட்டிப்போட்டுள்ளது. மொத்த உற்பத்தியை விட கிரீஸ் கூடுதல் கடனில் சிக்கியுள்ளது. அக்கடன் சுமார் 300 பில்லியன் யூரோக்கள் இருக்கும் என கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.