2010-05-07 16:15:48

திருத்தந்தை- வத்திக்கானில் பணியாற்றும் சுவிஸ் கார்ட்ஸின் சேவையானது கத்தோலிக்கம் இன்னும் அதிக உயிர்த்துடிப்புடன் வாழப்படுவதற்கு உதவியாக இருக்கின்றது


மே07,2010 வத்திக்கானில் இவ்வியாழனன்று புதிதாகப் பணிப்பிரமாணம் எடுத்த முப்பது Swiss Guards ன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை இவ்வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புனித பேதுருவின் வழிவருபவர்க்குச் செய்யப்படும் இந்த வீரர்களின் சேவையானது கத்தோலிக்கம் இன்னும் அதிக உயிர்த்துடிப்புடன் வாழப்படுவதற்கு உதவியாக இருக்கின்றது என்றார்.

புனித பேதுருவின் வழிவருபவர் இவர்களில் உண்மையான ஆதரவையும் அவர்களின் விழிப்புடன்கூடிய பணியில் நம்பிக்கையும் வைக்கின்றார் என்ற திருத்தந்தை இந்த வீரர்களின் தாராளம் நிறைந்த பணிக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

1527ம் ஆண்டு உரோம் சூறையாடப்பட்ட போது, திருத்தந்தை ஏழாம் கிளமென்ட்டைப் பாதுகாப்பதற்காகப் போரிட்ட சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர், அவ்வாண்டு மே 6ம் தேதி கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக, சுவிஸ் படைவீரர்கள் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாக, வத்திக்கானில் சேவையாற்றி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.