2010-05-06 16:40:24

புனிதை லிசிய தெரேசாவின் திருப்பொருட்கள் முதன்முறையாக தென்னாப்ரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றன


மே06,2010 புனிதை லிசிய தெரேசாவின் திருப்பொருட்கள் முதன்முறையாக தென்னாப்ரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றன, அதிலும் குறிப்பாக அந்நாட்டில் 2010 FIFA உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டிகளின் போது அப்புனிதப் பொருட்கள் அந்நாட்டில் வைக்கப்பட்டிருக்கும் என்று தென்பிராந்திய ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

குழந்தை தெரேசா எனப்படும் லிசிய நகர் புனித தெரேசாவின் திருப்பொருட்கள், வருகிற ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை ஜோஹான்னஸ்பர்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டது.

சர்வதேச கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் இதே நகரில் ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகின்றது.

புனிதை குழந்தை தெரேசாவின் புனிதப் பொருட்கள் தென்னாப்ரிக்க மக்களுக்குத் தூண்டுதலாகவும், அவர்களின் விசுவாசத்தை திடப்படுத்தி அதை உறுதியுடன் வாழ உதவும் என்ற நம்பிக்கையையும் ஆயர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.