2010-05-06 16:41:16

பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட உலகின் அணுகுமுறை, பொருளாதாரத்திலும் நிலையற்ற தன்மையை உருவாக்குகின்றது – வத்திக்கான் கருத்தரங்கு


மே06,2010 பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட உலகின் அணுகுமுறை, மனிதன் குறித்த கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் நிலையற்ற தன்மையை உருவாக்குகின்றது என்று திருப்பீட சமூக அறிவியல் துறை கருத்து தெரிவித்தது.

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் “Caritas in Veritate” அதாவது உண்மையில் பிறரன்பு என்ற அப்போஸ்தலிக்கத் திருமடல் மற்றும் பொருளாதாரம் குறித்த அதன் நல்தூண்டுதல்கள் பற்றி இந்தத் திருப்பீடத் துறை நடத்திய ஆண்டு மாநாட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இம்மாநாடு குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய, இதில் கலந்து கொண்ட, திருப்பீடத்துக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு முன்னாள் தூதர் Mary Ann Glendon, பணத்தை மட்டுமே மையமாகக் கொண்ட உலகின் அணுகுமுறை, நலிந்த பொருளாதார அமைப்பை உருவாக்குகிறது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.