2010-05-05 17:59:20

வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கை குடியேற்றதார தொழிலாளருக்கு உதவும் நோக்கத்தில் வழிகாட்டி கையேடுகள்


மே05,2010 வெளிநாடுகளில் வீட்டுவேலை செய்யும் இலங்கை குடியேற்றதார தொழிலாளருக்கு உதவும் நோக்கத்தில் வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டுள்ளது இலங்கை காரித்தாஸ் அமைப்பு.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், அராபியம் ஆகிய மொழிகள் அடங்கிய இரண்டு கையேடுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும், படத்தயாரிப்பாளர் Bertram Nihal உருவாக்கியுள்ள சிறிய குறும்நாடகத்தையும் காரித்தாஸ் அமைப்பு கொழும்புவில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிட்டுள்ளது.

இதில் உரையாற்றிய இலங்கை காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருட்பணியாளர் ஜார்ஜ் சிகாமணி, குடியேற்றதாரர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைவதற்கு அரசு ஆர்வம் காட்டுவதில்லை எனக்குறை கூறினார்.

காரித்தாஸின் கணிப்பின்படி, வறுமையினாலும் போரினாலும் இலங்கையை விட்டு வெளியேறியுள்ள ஏறத்தாழ 15 இலட்சம் மக்களில் 93 விழுக்காட்டினர் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.