2010-05-05 17:35:14

மே 06 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்த நரிக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஆடுகள் கூட்டம் கூட்டமாய் வாழ்கின்றன. ஆனால் சிங்கங்கள் அப்படி வாழ்வதில்லையே ஏன் என்ற கேள்வியை மனதிற்குள்ளே போட்டுக் குழப்பியது. மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. நரி கேள்வி கேட்ட அனைவரும் சொன்ன பதில்கள் எதுவும் அதற்குத் திருப்தியாக இல்லை. மீண்டும் யோசித்தது. கடைசியாக ஒரு புறாவிடம் கேட்டது. அதற்குப் புறா, உழைத்து வாழ்பவர்களால்தான் கூடி வாழ முடியும் என்று பதிலைப் பளீரெனச் சொன்னது.

ஆம். உறிஞ்சி வாழும் கூட்டம் கூடி வாழாது. அப்படி வாழ்ந்தாலும் ஒன்றையொன்று உறிஞ்சித்தான் வாழும்







All the contents on this site are copyrighted ©.