2010-05-05 17:41:32

உலகை அணுஆயுதங்களற்ற இடமாக மாற்றுவதற்கு திருத்தந்தை வேண்டுகோள்


மே05,2010 நம்பிக்கை, கடமைகளை மதித்தல், வரலாற்றின் கட்டுப்பாடுகளை மேர்கொள்ளுதல் ஆகியவை இந்தப் பூமிப்பந்திலிருந்து அணுஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்குத் தேவையானவை என்று திருத்தந்தை கூறினார்.

RealAudioMP3 உலகில் அணுஆயுதப்பரவல் தடை குறித்துப் பரிசீலனை செய்வதற்காக நியுயார்க்கில் மே3ம் தேதி தொடங்கியுள்ள 8வது கருத்தரங்கில் கலந்து கொள்ளும் உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இவ்வழைப்பை முன்வைத்தார் திருத்தந்தை.

பாதுகாப்பான அணுஆயுதக்களைவை நோக்கிய நடவடிக்கை, நேர்மையான சர்வதேச அர்ப்பணத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்றுரைத்தார் அவர்.

அமைதி உண்மையில், சமத்துவமான அதிகாரத்தில் மட்டுமல்லாமல், நம்பிக்கை மற்றும் கடமைகளின் மீதான மதிப்பிலும் இருக்கின்றது என்ற அவர், இந்த ஓர் உணர்வில் உலகை அணுஆயுமற்ற இடமாக மாற்றுவதற்கான தலைவர்களின் முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நியுயார்க் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவரும் மனித முன்னேற்றத்திற்கும் மக்களின் நியாயமான ஏக்கங்களுக்கும் உதவுமாறு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.