2010-05-04 16:05:59

சிறாரின் வாழ்வும் மாண்பும் பாதுகாக்கப்பட மெக்சிகோ ஆயர்கள் வேண்டுகோள்


மே04,2010 சிறாரின் வாழ்வும் மாண்பும் பாதுகாக்கப்படவும் குடும்பங்களிலும் திருச்சபையிலும் சமுதாயத்திலும் அவர்கள் இணைக்கப்படவும் வேண்டுமென மெக்சிகோ ஆயர்கள் கத்தோலிக்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மெக்சிகோவில் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு அந்நாட்டு ஆயர் பேரவையின் குடும்பம், இளையோர் மற்றும் பொதுநிலையினர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஆயர் Francisco Chavolla Ramos, நற்செய்தியில் சிறாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பு குறித்து நினைவுபடுத்தியுள்ளதோடு, இயேசு, குழந்தைகளை எளிமைக்கு எடுத்துக்காட்டுகளாகவும், அதனைப் போதிப்பவர்களாகவும் முன்வைத்துள்ளதைத் திருச்சபை மறக்கவில்லையென்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குழந்தைகள் தினமான நவம்பர் 20ம் தேதி மெக்சிகோவில் எழுச்சி நாள் கடைபிடிக்கப்படுவதால் ஏப்ரல் 30ம் தேதி அந்நாட்டில் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.