2010-05-04 16:20:19

இளம் சீனத் தொழிலாளர் மத்தியில் தற்கொலைகள் அதிகரிப்பு- ஊடகங்கள்


மே04,2010 சீனாவில் பெரிய தொழிற்சாலைகளில் காணப்படும் மனிதாபிமானமற்ற வேலைநிலைகள், அதிகமான வேலைப்பளு, கடும் ஒழுங்கு கட்டுப்பாடு போன்றவற்றால் இளம் சீனத்தொழிலாளர் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

சீனத் தொழிலாளர் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைப் பிரச்சனை குறித்து அண்மையில் கட்டுரை வெளியிட்டுள்ளது சீன மக்கள் குடியரசில் தொழிலாளரின் உரிமையைப் பாதுகாத்து வளர்க்கும பிரபலமான சீனத் தொழில் இதழ்.

அக்கட்டுரையின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளதாக அந்த ஊடகச் செய்தி கூறியது.

சீனாவில் அதிகரித்து வரும் தற்கொலைகளால் Foxconn கம்பெனி தனது மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்க்கு உளவியல் ஆலோசனை வழங்குவதாக அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.