2010-05-04 16:21:32

இந்திய சிறு தொழில்களுக்கு இங்கிலாந்தில் நல்ல வாய்ப்பு:​ தூதரக அதிகாரி தகவல்


மே03,2010 இந்திய சிறு தொழில்களுக்குப் பிரிட்டனில் நல்ல வாய்ப்புள்ளது என,​​ இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகத் துணை கமிஷனர் மைக் நித்தவரினாகிஷ் தெரிவித்தார்.

​​ மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு ​(சிஐஐ)​ சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், ​ இந்தியாவில் குறிப்பாக சென்னை மற்றும் தென்மாநிலங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய இங்கிலாந்து கம்பெனிகள் ஆர்வம் காட்டிவருகின்றன.​ இங்கு நிலவும் அமைதி மற்றும் தென்மாநிலங்களில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை போன்றவைகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.​ ​இந்தியா-இங்கிலாந்து இடையே குறிப்பிடும்படியான சுமூகமான வர்த்தக உறவு நீடிக்கிறது.​ குறிப்பாக இருதரப்பு வர்த்தக வளர்ச்சியும் சீராக உள்ளது.​ இந்திய சிறுதொழில்களுக்கு இங்கிலாந்தில் நல்ல வாய்ப்புள்ளது என்றார்.

​​ உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் இங்கிலாந்தில் 6 சதம் வரை ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி பாதிப்படைந்தது.​ ஆனால் தற்போது சீரான வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

​​ மருந்து தயாரிப்பு,​​ நலவாழ்வு,​​ கல்வி,​​ தகவல் தொழில்நுட்பம்,​​ உயர் பொறியியல் துறை போன்றவற்றில் இந்தியாவுடனான வர்த்தகத்துக்கு இங்கிலாந்தில் நல்ல வாய்ப்புள்ளது.

இங்கிலாந்தில் 1.50 லட்சம் இந்திய வம்சாவழியினர் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர்.​ பல நாட்டைச் சேர்ந்தோர் குடியுரிமை பெற்றிருந்தாலும்,​​ இந்திய வம்சாவழியினர் தொழில் மேற்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.








All the contents on this site are copyrighted ©.