2010-05-01 15:31:03

சீனாவில் அருள்தந்தை மத்தேயு ரிச்சி தொடங்கிய அறிவியல், கலாச்சார, மற்றும் சமய உரையாடல், இன்றும் அந்நாட்டில் அதீத பொருளாதார வளர்ச்சியின் மூலம் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றது


மே01,2010 சீனாவில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய இயேசு சபை அருள்தந்தை மத்தேயு ரிச்சி தொடங்கிய அறிவியல், கலாச்சார, மற்றும் சமய உரையாடல், இன்றும் அந்நாட்டில் அதீத பொருளாதார வளர்ச்சியின் மூலம் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றது என்று உரோமையில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில் அறிவிக்கப்பட்டது.

அதேசமயம், அவை, வறுமை, மோதல், ஆன்மீக வெற்றிடம் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளன, மேலும், நல்லிணக்க சமுதாயத்தைச் சமைப்பதற்கு சீன அதிகாரிகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியைத் தழுவும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

சீனாவில் மாபெரும் மறைப்பணியாற்றிய இயேசு சபை அருள்தந்தை மத்தேயு ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டை முன்னிட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ரிச்சி ஆண்டு, இம்மாதம் 11ம் தேதியோடு நிறைவடையும்.

இநத்க் கருத்தரங்கில் வத்திக்கான் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.