2010-05-01 15:32:52

அணு ஆயுதங்களற்ற பகுதிகள் உலகில் அதிகரிக்க வேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்


மே01,2010 ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆயுதப்பரவல் தடை குறித்த பெரிய கருத்தரங்கு வருகிற திங்கள்ன்று இடம் பெறவிருப்பதை முன்னிட்டு நிருபரிகளிடம் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அணு ஆயுதங்களற்ற பகுதிகள் உலகில் அதிகரிக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார்.

ஈரான் அரசுத்தலைவர்Mahmoud Ahmadinejad உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அணுப்பரவல் தடை உடன்பாடு குறித்து பரிசீலனை செய்வார்கள் என்றும் மூன் கூறினார்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், தென் பசிபிக், தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகள் தற்சமயம் அணுஆயுதங்களற்ற பகுதிகளாக இருக்கின்றன என்றும் மூன் கூறினார்







All the contents on this site are copyrighted ©.