2010-04-29 15:31:27

ஏப்ரல் 30 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1483 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை இருந்தது. 1492 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நாடுகாண் கடற்பயணத்தைத் தொடங்க ஸ்பெயின் அவருக்கு அனுமதியளித்தது.

1803 - அமெரிக்க ஐக்கிய நாடு, லூசியானா மாநிலத்தை பிரான்சிடமிடருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.

1838 – நிக்கராகுவா, மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1900 – ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு பகுதியானது.

1945 - அடால்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் செங்கொடியை ஏற்றினர்.

1982 - திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1991 - யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

1999 - ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.

2006- ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.