2010-04-29 15:30:31

ஏப்ரல் 30 நாளும் ஒரு நல்லெண்ணம்


நாம் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போதோ அவர் அந்த இடத்திற்கு வந்தால் உங்களுக்கு நூறு வயசு, ஆயுசு கெட்டி. தீர்க்க ஆயுசு என்று வாய்நிறைய வாழ்த்துகிறோம். ஆனாலும் இப்படி நம் வாழ்த்துதலைப் பெற்ற எல்லாருமே நூறு வயதுவரை வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இந்த சந்தேகம் திருதராஷ்டிரனுக்கும் வந்தது. உடனே திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்துக் கேட்டார்- ஏன் இப்படி யாருமே பூரண ஆயுள் வாழ்கிறதில்லை என்று. அதற்கு விதுரர் பதில் சொன்னார் – மனிதனுடைய ஆயுளை அழிப்பவை ஆறு கூரிய வாள்கள். அதாவது, அதிக கர்வம், அதிகம் பேசுவது. தியாக மனப்பான்மை இல்லாமை, கோபம், சுயநலம் மற்றும் நண்பர்களுக்குத் துரோகம்








All the contents on this site are copyrighted ©.