2010-04-29 15:42:09

'இமயமலையில் அதிகமான பனிப்பொழிவு இந்தியாவின் வறட்சிக்குக் காரணம் - புது தகவல்


ஏப்ரல்29,2010 : 'இமயமலையில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும் காலங்களில், இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படுகிறது. மழைப்பொழிவு குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம்' என, பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவு குறித்துக் கூறிய அந்த ஆய்வாளர்கள், பசிபிக் கடல் பகுதியில் நிலவும் வெப்பம், இமயமலையில் ஏற்படும் பனிப்பொழிவு, திபெத் பீடபூமி பகுதியில் நிலவும் வானிலை ஆகியவற்றை மையமாக வைத்து மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு அறிய வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

குளிர்காலங்களில் இமயமலை பகுதியில், வழக்கத்தைவிட கடும் பனிப்பொழிவு இருக்கும் காலத்தில் எல்லாம், இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்பதை அறிய முடிந்தது என்றும் பிரிட்டன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் பருவ மழை குறைவாக பெய்வதற்கும், கால தாமதமாக பெய்வதற்கும் இது தான் முக்கிய காரணமாக உள்ளது எனவும் அன்டி டர்னர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.