2010-04-28 16:16:39

மேதின பேரணிக்காக நேபாள மாவோயிஸ்ட்கள் கத்தோலிக்கத் திருச்சபையிடம் தங்குமிடம் கேட்டுள்ளனர்


ஏப்ரல்28,2010 மே தின பேரணிக்காக நேபாளத் தலைநகர் காட்மண்ட் நகருக்குப் பிற கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வரும் பல்லாயிரக்கணக்கான மாவோயிஸ்ட் உறுப்பினர்களுக்குத் தங்குவதற்கு இடமளிக்குமாறு கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டுள்ளனர் என்று யூக்கா செய்தி நிறுவனம் அறிவித்தது.

இது குறித்து யூக்கா செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி இயேசு சபை ஆயர் அந்தோணி ஷர்மா, திருச்சபை நிறுவனங்கள் தர்மசாலா அல்ல என்று மாவோயிஸ்ட் தலைவர்களுக்குப் பதில் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, மாவோயிஸ்டுகள் ஒரு குருவிடம் ஒருமணி நேரம் அவகாசம் கொடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.