2010-04-27 15:23:05

ஏப்ரல்28 நாளுமொரு நல்லெண்ணம்


நகைச் சுவையில் புகழ்பெற்று வரும் ஒரு கலைஞர் தொலைக் காட்சியில் புல்லாங்குழல் பற்றி சொன்ன ஒரு கருத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக சிந்தித்தேன். இதோ என் சிந்தனைகள்.

புல்லாங்குழல் செய்பவர் ஒருவர் மூங்கிலை வெட்டித் துளைகள் செய்தார். அவர் வெட்டி எடுத்த மூங்கில் தன் மீது விழும் துளைகளை விரும்பாததால், கோபத்தில் முனகிக் கொண்டே இருந்தது.

அந்த புல்லாங்குழலை வைத்து மேடையில் ஒரு இசைக் கலைஞர் வாசித்தபோது, அழுகுரல் ஒன்றையே அந்தக் குழல் எழுப்பியது. அதை வாசித்தவர் எவ்வளவு முயன்றும் வேறு எந்த ஒலியும் அந்தக் குழலிடமிருந்து வரவில்லை. கோபத்தில் அந்தக் கலைஞர் அந்தப் புல்லாங்குழலை உடைத்துப் போட்டார்.

மற்றொரு மூங்கில் புல்லாங்குழலாக மாறிய போது, தன் உடலில் செய்யப்பட்ட துளைகளை அமைதியாகத் தாங்கிக் கொண்டது. அந்தக் குழல் மேடையேறி, கலைஞர் ஒருவரின் மூச்சுக் காற்றை தன் துளைகள் வழியே அழகிய இசையாய் வெளியிட்டது. கேட்டவர்கள் மெய் மறந்தனர். அந்தக் குழலும் புகழ் பெற்றது.








All the contents on this site are copyrighted ©.