2010-04-26 15:50:37

செர்னோபில் அணுமின் நிலைய பேரிடர் இடம் பெற்றதன் 24ம் ஆண்டு


ஏப்ரல்26,2010 உலகில் இடம் பெற்றுள்ள மிகக் கொடூரமான அணுமின் நிலைய விபத்தான உக்ரேய்ன் நாட்டு செர்னோபில் பேரிடர் இடம் பெற்றதன் 24ம் ஆண்டை முன்னிட்டு செய்தி வழங்கியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலரின் பேச்சாளர்.

24 ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் 26ம் தேதி இடம் பெற்ற இப்பேரிடரில் 3 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் முழுவதுமாகத் தங்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர், பின்னர் ஆயிரக்கணக்கான சிறார் தைராய்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டனர் என்றுரைக்கும் அவரின் செய்தி, இப்பேரிடர் நிவாரணப் பணியில் நூற்றுக்கணக்கானோர் உடனடியாக ஈடுபட்டதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த விபத்து இடம் பெற்றதன் 25ம் ஆண்டையொட்டி 2011ம் ஆண்டு ஏப்ரலில் இது குறித்த சர்வதேச கருத்தரங்கை நடத்துவதற்கு உக்ரேய்ன் நாடு பெலாருஸ் மற்றும் இரஷ்ய கூட்டமைப்புடன் சேர்ந்து எடுத்து வரும் முயற்சியை ஐ.நா.பொதுச் செயலர் வரவேற்றுள்ளதையும் அவரின் பேச்சாளரின் செய்தி சுட்டிக் காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.