2010-04-26 15:49:45

ஆஸ்திரேலியாவில் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டினர் சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக வாழக்கூடிய நிலை ஏற்படக்கூடும் - டெய்லி டெலகிராப்'


ஏப்ரல்26,2010 ஆஸ்திரேலியாவில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டினர் சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக வாழக்கூடிய நிலை ஏற்படக்கூடும் என்று 'டெய்லி டெலகிராப்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து, ஆஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், இன்னும் 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மக்கள், அவர்களது சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக மாறிப் போகும் பரிதாப நிலை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆஸ்திரேலியாவில் அவர்களின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும். ஆஸ்திரேலியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை நிலவரப்படி, பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 14.2 சதவீதமும், நியூசிலாந்து நாட்டினர் 11.4 சதவீதமும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 11.2 சதவீதமும், சீனா நாட்டினர் 10 சதவீதம் வாழ்கின்றனர்.

 








All the contents on this site are copyrighted ©.