2010-04-25 12:19:25

ஏப்ரல் 26 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1762 - கர்நாடகஇசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் பிறந்தார்.

1802 - பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் நெப்போலியன் பொனபார்ட்.

1865 - அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜான் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றன.

1962 - நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.

1964 – தங்கனீக்கா, சான்சிபார் ஆகிய இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு டான்சானியா என ஒரு நாடாகியது.

1986 - உக்ரைய்னில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

2005 - 29ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முழுவதுமாக விலக்கிக் கொண்டது.

1920 ல் கணிதமேதை ஸ்ரீனிவாச இராமனுஜமும்

1897 ல் மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் பெ. சுந்தரம் பிள்ளையும் இறந்தனர்

ஏப்ரல் 26 தான்சானியாவின் தேசிய நாள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்

 








All the contents on this site are copyrighted ©.