2010-04-24 15:49:36

ஏப்ரல்25 வரலாற்றில் இன்று


1874 ல் வானொலியைக் கண்டு பிடித்த குல்யெல்மோ மார்க்கோனியும்

1906 ல் நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியான புதுமைப்பித்தனும் பிறந்தனர்

1966 - தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 3,00,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1974 - போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.

1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.

1983 - ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் "ஹிட்லரின் நாட்குறிப்புகள்" நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் "ஸ்டேர்ன்" இதழ் வெளியிட்டது.

2005 - இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எத்தியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஏப்ரல் 25 உலக மலேரியா தினம்








All the contents on this site are copyrighted ©.