2010-04-24 16:09:18

ஊடகத்துறையில் வேலை செய்யும் விசுவாசிகள் மனிதன் மற்றும் அவனின் ஆன்மீகத் தேவைகளில் கவனம் செலுத்த திருத்தந்தை அழைப்பு


ஏப்ரல்24,2010 இத்தாலிய ஆயர் பேரவை நடத்திய, “டிஜிட்டல் சாட்சிகள்” என்ற டிஜிட்டல் ஊடகம் குறித்த மூன்று நாள் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் ஆறாயிரம் பேரை வத்திக்கானிலுள்ள பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் இச்சனிக்கிழமை சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

ஊடக உலகமானது, சமூகத் தொடர்புகளுக்கும் தகவல் வழங்குவதற்குமான அதிகமான வாய்ப்புக்களை, குறிப்பாக மனிதன் பற்றியும் உலகளாவிய மதிப்பீடுகளை மதிக்கும் பொது நலன் பற்றியும் செய்திகளை வழங்கும் போது அது மனிதாபிமானக் கூறைக் கொண்டதாக மாற முடியும் என்று கூறினார் திருத்தந்தை.

இதற்கு, பிறரன்பு, உண்மை, நன்மைத்தனம், இயல்பான மற்றும் இயல்புகடந்த சகோதரத்துவம் ஆகியவற்றால் தூண்டப்பட்டு மக்களின் மாண்பை வளர்ப்பதை நோக்கம் கொண்டதாய் செயல்பட வேண்டும் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

ஊடகத்துறையில் வேலை செய்யும் ஒவ்வொரு திருச்சபைப் பணியாளரும், மனிதன் மற்றும் அவனின் ஆன்மீகத் தேவைகளில் கவனம் செலுத்தி புதிய அனுபவங்களுக்குத் தங்களைக் கையளிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

ஊடகத்துறையினர் டிஜிட்டல் கண்டத்தின் தெருக்களில் நடக்கும் பொழுது அவர்கள் தூய ஆவியால் திடப்படுத்தப்பட்டு வழிநடத்தப்படுவார்கள் என்ற தமது நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.