2010-04-23 15:27:44

மாசிடோனியக் குடியரசு, ஐரோப்பிய சமுதாய அவையுடன் இணையும் திருத்தந்தை நம்பிக்கை


ஏப்ரல்22,2010 மாசிடோனியக் குடியரசு, ஐரோப்பிய சமுதாய அவையுடன் இணைவதற்கான அந்நாட்டின் ஏக்கங்களும் முயற்சிகளும் விரைவில் நிறைவேறும் என்ற தமது நம்பிக்கையை தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
முன்னாள் யூக்கோஸ்லாவிய குடியரசான மாசிடோனியாவின் திருப்பீடத்திற்கான புதிய தூதர் Gioko Gjorgjevski ஐ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மாசிடோனியக் குடியரசின் பாரம்பரிய மதிப்பீடுகள், உறுதியான ஆன்மீகத் தனித்துவம், அதன் உரிமைகள், கடமைகள் ஆகியவை ஏற்கப்படும் சூழலில் அந்நாடு ஐரோப்பிய சமுதாய அவையுடன் இணைக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் திருத்தந்தை கூறினார்.
இரண்டாம் உலகப்போரின் கொடூரங்கள், அடிப்படை மனித உரிமைகளைப் புறக்கணிக்கும் சர்வாதிகார ஆட்சியின் சோகமான அனுபவங்கள் ஆகியவற்றுக்குப் பின்னர் மாசிடோனிய மக்கள் பொறுமையைக் கடைபிடித்து, தியாக மனப்பான்மையுடன் நல்லிணக்கத்தில் முன்னேறி, எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.அமைதி மனிதச் செயல்கள் மற்றும் திட்டங்களின் பலனாக கிடைப்பது அல்ல, மாறாக இது நன்மனம் கொண்ட மக்களுக்கு கடவுள் அருளும் கொடையாகும் என்றும், நீதி மனித உரிமைகளையும் கடமைகளையும் முழுவதுபம் மதிப்பதில் அடங்கியுள்ளது என்றும், மன்னிப்பு கடந்த காலக் கருத்துக் கோட்பாடுகளால் இன்னும் துன்புறும் மக்களுக்கிடையேயான உறவுகளைக் குணப்படுத்தி அவை மீண்டும் கட்டி எழுப்பப்பட உதவுகின்றது என்றும் சமூகத்தைக் கட்டி எழுப்ப அமைதியும் மன்னிப்பும் அடிப்படைத் தூண்கள் என்றும் மாசிடோனியத் தூதரிடம் கூறினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.