2010-04-23 15:52:17

ஏப்ரல் 24 - நாளும் ஒரு நல்லெண்ணம்


பிரச்சனைகள் எங்கிருந்து வருகின்றன? நமக்குள்ளிருந்தா? வெளியிலிருந்தா?
சும்மா காலையில் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தவன் கைகளில் ஏதோ ஒரு பொட்டலத்தைப் திணித்துவிட்டு ஒருவன் ஓட, "அவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? உன்னிடம் அவன் கஞ்சா பொட்டலத்தைக் கொடுக்க வேண்டிய காரணம் என்ன?" என காவல் துறை தோண்டியெடுக்க, தூக்கம் தொலை தூரமானது.
இன்னொருவன் சாலையில் நடந்து கொண்டிருந்த போது, இருவர் சண்டையிட்டு, ஒருவன் மற்றவனைக் கத்தியால் குத்த, 'ஐயோ இங்கிருந்தால் நமக்கு ஆபத்து' என இவன் ஓட, 'ஏன் ஓடினாய்?' எனக் காவல் துறை துரத்திப் பிடித்தது. வெளியே நடந்த கலவரம், இவனுக்குள் புகுந்து, பயத்தைத் தந்து ஓட வைத்தது. அதுவே அவனை ஒடுங்கவும் வைத்தது. பிரச்சனைகள் நம்மாலும் வருகின்றன. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்தும் வருகின்றன. இவைகளைத் திட்டமிட்டு தடுக்க முடியாது. ஆனால், அவைகளை அணுகும் விதங்களை மாற்றி, விளைவுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.







All the contents on this site are copyrighted ©.